ஆளுமை:வரதராஜன், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வரதராஜன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராஜன், செல்லத்துரை
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1946.08.23
ஊர் கொக்குவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ. வரதராஜன் (1946.08.23 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் யாழ்ப்பாண கல்வி வலயத்தில் சேவைக்கால ஆலோசகராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவராவார்.

ஆலயங்கள், சமய நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் ஆகிய இடங்களில் தனது ஆற்றுகையை வெளிப்படுதியுள்ள இவரது ஓவியங்கள் உயிரோட்டமானவையாகவும், புராண, இதிகாச, சமய, சரித்திர நிகழ்வுகளை நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை கலாரசிகர்களின் மனதில் பசுமரத்தானிபோல் பதியவைப்பவையாகவும் காணப்படும். யப்பான் நாட்டில் நடைப்பெற்ற கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட போது அவை சிறந்த ஓவியங்களாக அந்நாட்டினரால் தெரிவி செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தினால் இக் கலைஞருக்கு ஓவியமணி என்ற பட்டமும், யாழ்ப்பாண மயிலணி மகா வித்தியாலயத்தினரால் இவருக்கு ஓவியகேசரி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 194