ஆளுமை:கமலா, பெரியதம்பி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:05, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கமலா பெரியத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலா பெரியதம்பி
தந்தை நாகமுத்து
தாய் சிவகாமி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலா பெரியதம்பி யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர்; ஆசிரியர். இவரது தந்தை நாகமுத்து; தாய் சிவகாமி. இவர் கொழும்பு, மட்டக்களப்பு, சிதம்பராக் கல்லூரிகளில் கல்வி கற்றவர். இவர் பதினெட்டு வயதில் இசை ஆசிரியரானார். சென்னை வானொலி வித்துவான் எஸ். பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சங்கீதம் கற்று சென்னை அரசாங்க இசைப் பரீட்சை டிப்ளோமாப் பட்டம் பெற்றவர். வானொலி நாடகங்களை எழுதி தானே நடித்தும் இருக்கிறார். இளவயதிலிருந்தே தனது திறமையை வீரகேசரி, தினகரன், சுதந்திரன், போன்ற பத்திரிகைகளில் காட்டியுள்ளார்.


இதுவரை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளில் 19 சிறுகதைகள் "மாங்கல்யம்" என்ற அழகிய தொகுப்பு நூலாக வெளி வந்தது. நீதிக் கதைகளில் "ஆத்திசூடி" என்ற நூலும் வெளிவந்தது. இவர் தமிழ் கவிக் காவினிலே எண்பது இது 21 கவிநயக் கட்டுரைகளைக் கொண்டது. தமிழ் நாட்டின் வெளியான நூலின் பெயர் "அருளும் ஒளியும்" என்பது பாமலர்கள் பலவற்றைக் கொண்ட ஓர் இந்து சமயக் கதம்ப நூல் இது கானக் குயில்; செந்தமிழ் சொற்செல்வி; "இரு கலை வல்லபி" என்ற பட்டங்களைப் பெற்றவர். 1997 இல் தமிழர் தகவல் பத்திரிகை இலக்கிய சேவை விருதுடன் தங்கப் பதக்கங்களும் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 68