ஆளுமை:சக்திதேவி சிவகுமார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 9 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சக்திதேவி, சிவகுமார்
பிறப்பு 1954.08.23
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சக்திதேவி, சிவகுமார் (1954.08.23 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பயின்று சங்கீத டிப்ளோமா மற்றும் இசைக்கலைமாணி பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சங்கீத கலாவித்தகர் பட்டத்தை வட இலங்கை சங்கீத சபையிலும் பெற்றுக் கொண்டார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தென்னிந்திய இசைப் பேராசிரியர் ரீ.என்.கிருஷ்ணனாலும் ஏனைய கூட்டுத்தாபன மதிப்பீட்டாளர்களாலும் A நிலை கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் மெல்லிசை, இசைச் சித்திரம் எனப் பல நிகழ்ச்சிகளில் எட்டு ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளார். இவரது ஓராயிரம் யுகங்கள் உனக்காக நானிருப்பேன் பாடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெளியிடப்பட்ட சிறந்த பன்னிரண்டு கலைஞர்களின் பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகிய பொன்மணி படத்தில் பாடல்கள் பாடி சினிமாத் துறையிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் தினக்குரல் ஆ.சி.நடராசாவால் யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற கலைச் சங்கமம் நிகழ்வின் போது 'புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் பாமாலை' பாடல்களிற்கு இசையமைத்தமைக்காகப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 128