ஆளுமை:ஜெயபாலன், வ. ஐ. சண்முகம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயபாலன்
தந்தை சண்முகம்பிள்ளை
பிறப்பு 1944
ஊர் உடுவில், நெடுந்தீவு
வகை கவிஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயபாலன், சண்முகம்பிள்ளை (1944 - ) யாழ்ப்பாணம், உடுவிலைப் பிறப்பிடமாகவும் நெடுந்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளன். இவரது தந்தை சண்முகம்பிள்ளை. இவர் கவிதை, சிறுகதைகள் எழுதியதுடன் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் சேரன், சோலைக்கிளி ஆகிய கவிதைநூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் புகழ் பெற்றவர். இவர் பொருளியற் பட்டதாரி. இவர் இலங்கை முஸ்லீம் மக்களின் சமூக பொருலாதார வாழ்க்கை நிலைகள் பற்றி ஆய்வு செய்து தேசிய இனப் பிரச்சனையும் முஸ்லீம் மக்களும் ( அலை வெளியீடு, 1984) நூல் எழுதினார்.

சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும், ஒரு அகதியின் பாடல், வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் ஆகியன இவரது கவிதை நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 171
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 12
  • நூலக எண்: 3848 பக்கங்கள் 141-142
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 69-73