ஆளுமை:பாலையா, விசுவநாதர். (சக்தீ. அ. பாலையா)

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:31, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பாலஐயா, விசுவநாதர். (சக்தீ. அ. பாலைஐயா), [[ஆளுமை:பாலையா, விசுவநாதர். (சக்தீ. அ. ...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பால ஐயா
தந்தை விசுவநாதர்
தாய் இலக்குமி அம்மை
பிறப்பு 1925.07.26
இறப்பு 2013.08.02
ஊர் வத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பால ஐயா, விசுவநாதர் (1925.07.26 - 2013.08.02) வத்தளை, மாபொலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை விசுவநாதர்; தாய் இலக்குமி அம்மை. இவர் படிப்பை முடித்து ஓவியராகத் தனது வாழ்வைத் தொடங்கினார். இவர் அரசினர் நுண்கலைக் கல்லூரியில் கலையாசிரியராகப் பயிற்சி பெற்று இலங்கை ஆசிரிய கல்லூரி, ஹேவுட்ஸ் கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவரது ‘பாரதியின் தாக்கம்’ என்ற முதற் கவிதையானது 10 ஆவது அகவையில் எழுதப்பட்டது. இவர் மனோதத்துவமும் கலையும் போதனா முறையும், சொந்த நாட்டிலே, தேயிலைத் தோட்டத்திலே, சக்தீ பாலையா கவிதைகள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். எழுத்துலகில் இவரது ஆளுமைக்காகக் கவிச்சுடர், தமிழ் ஒளி, மூதறிஞர், கலாபூசணம், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 52-58


வெளி இணைப்புக்கள்

இவர்கள் நம்மவர்கள் வலைத்தளத்தில் சக்தீ. அ. பாலஐயா