ஆளுமை:ரதிதேவி, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:00, 15 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரதிதேவி
தந்தை சுப்பிரமணியம்
தாய் இராசம்மா
பிறப்பு 1953.08.04
ஊர் கிளிநொச்சி, பரந்தன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரதிதேவி, கந்தசாமி (1953.08.04 -) கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியைப் பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். இவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் 1973 இல் வானொலி மூலமே பிரபலம் பெற்றது. 1974 ஆம் ஆண்டு பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். ரதிதேவியின் கணவர் பெயர் கந்தசாமி. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அரசி, இளவரசி. ரதிதேவியும் கணவரும் தற்போது ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்துவருகிறார்கள்.

இவரது முதலாவது சிறுகதையான 'கோபுரம் சாய்கிறது' 1974 ஆம் ஆண்டு வீரகேசரியிலும் முதலாவது நாவலான 'சுமைகள்' 1978 ஆம் ஆண்டு வீரகேசரியின் 55 ஆவது பிரசுரத்திலும் வெளியானது.

அதைத் தொடர்ந்து, இலங்கையில் தினகரன், சிந்தாமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், சிரித்திரன், சுடர், வெளிச்சம், நாற்று, மாணிக்கம், கலாவல்லி, களம், தாரகை, ஆதாரம், கிருத யுகம், விளக்கு, அமிர்த கங்கை, பெண்ணின் குரல், தாயகம், வளையோசை, மாருதம், ஜீவநதி, யாழ்மதி, நுட்பம் ஆகிய ஈழத்துச் சஞ்சிகைகளிலும் தமிழகத்தில் ஆனந்த விகடன், குங்குமம், மங்கை, இதயம் பேசுகிறது ஆகிய சஞ்சிகைகளிலும் பரீஸ் ஈழநாடு, பரீஸ் ஈழமுரசு, எரிமலை, களத்தில், ஆஸ்திரேலிய மெல்பேர்ன் எதிரொலி, கனடா தாய்வீடு முதலான பத்திரிகைகளிலும் நடு(பிரான்ஸ்), வணக்கம் லண்டன், அக்கினிக் குஞ்சு (ஆஸ்திரேலியா) ஆகிய இணைய சஞ்சிகைகளிலுமாக இவரது இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.

இவர் தாமரைச் செல்வி என்ற புனைபெயரில் வன்னியாச்சி, ஒருமழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் வேள்வித் தீ, அவர்கள் தேவர்களின் வாரிசுகள் போன்ற குறுநாவல்களையும் விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், பச்சை வயல் கனவு, வீதியெல்லாம் தோரணங்கள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

தாமரைச்செல்வி ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி 2006 வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

தாமரைச்செல்வியின் ‘இன்னொரு பக்கம்’ என்ற சிறுகதை, இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தரம் 11 ‘தமிழ்மொழியும் இலக்கியமும்’ என்ற பாடநூலில் 2015 ஆம் ஆண்டுமுதல் சேர்க்கப்பட்டுள்ளது

இவர் தனது படைப்பாற்றலால் இலங்கை சாகித்திய விருது, இலக்கியப் பேரவையின் பரிசு, சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நூலுக்கான விருது, கலாவல்லிச் சஞ்சிகையின் முதற் பரிசு, வடக்கு- கிழக்கு மாகாண அமைச்சின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான சாகித்திய விருது, இலங்கைக் கலைக்கழகத்தின் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவர் பெற்ற விருதுகளாக பச்சை வயற் கனவுகள் (நாவல்) - இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது, ஒரு மழைக்கால இரவு (சிறுகதைத் தொகுப்பு) - வடக்கு - கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு விண்ணில் அல்ல விடி வெள்ளி (நாவல்) - யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு, வீதியெல்லாம் தோரணங்கள்” (நாவல்) - வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு, தாகம் (நாவல்) - கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு, வேள்வித் தீ (குறுநாவல்) - முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு, வீதியெல்லாம் தோரணங்கள் (நாவல்) - வீரகேசரி - யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டியில் இரண்டாம் பரிசு, உயிர் வாசம் (நாவல்) தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய சிறந்த நாவல் விருது போன்ற விருதுகளைப் பெற்றார்.

இவருக்கு கிடைக்கப்பட்ட கௌரவங்களாக அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது (2000), வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது (2001), கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும் (2002), கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது (2003), தமிழ் நாடு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது(2010) கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது(2011), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது (2012), யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு (2015)


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 479-480
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 01-03
  • நூலக எண்: 2033 பக்கங்கள் 13-14
  • நூலக எண்: 82754 பக்கங்கள் 22-23