ஆளுமை:கந்தையா, பொன்னம்பலம் (காந்தி ஐயா)

From நூலகம்
Name கந்தையா
Pages பொன்னம்பலம்
Pages நன்னிப்பிள்ளை
Birth 1918.12.19
Pages 2017.02.03
Place மாதகல்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, பொன்னம்பலம் (1918.12.19 - ) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் நன்னிப்பிள்ளை. இவர் நுணசை முருகமூர்த்தி வித்தியாசாலையிலும் பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாசாலையிலும் கல்வி கற்று, சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், ஆசிரிய தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து வன்னியிலும் திருகோணமலையிலும் பணியாற்றினார்.

எனினும் வவுனியாவில் உள்ள கருங்காலிக்குளம் அரசினர் பாடசாலையில் முதன் முறையாக 1938ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி நியமணம் பெற்றார் அப்போது இப்பாடசாலையில் 27 மாணவர்கள் கற்றனர். இதன்போது சம்பளமாக 43.00 ரூபா பெற்றார். தொடர்ந்து 1939ம் ஆண்டு மட்டக்களப்பு ஏறாவூர் அரச பாடசாலையிலும் 1943ம் ஆண்டு திருகோணமலை பெரிய கிண்ணியா அரச பாடசாலையிலும் 1946ம் ஆண்டு திருகோணமலை தாமரைவில்லில் புதிய அரசினர் பாடசாலை ஒன்றை தொடங்கி தனது பணியை தொடர்ந்த காந்தி ஐயா தொடர்ந்து திரியாயிலும் அரச பாடசாலை ஒன்றை தொடங்கி சேவையாற்றியிருந்தார். பின்னர் 1947ம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் கக்கல அரசினர் பாடசாலையில் சேவையாற்றி அரச சேவையில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்தார்.

சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட இவர், தமது நாற்பத்து நான்காவது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் காந்தியக் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தமையால் காந்தி ஐயா என அழைக்கப்பட்டார். அகில இலங்கைக் காந்திசேவா சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தார்.

இருப்பினும் ஐயாவினுடைய சேவை மாணவர் சமுதாயத்திற்கு தேவை என்று கருதிய கல்வி அதிகாரி திரு.சந்திரசேகரம் அவர்கள் கொக்குவில் இராமகிருஷ்ண மிஷன் சைவ வித்தியாலயத்தில் சேவை செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் 1947ம் ஆண்டில் இருந்து 1951ம் ஆண்டு வரை அங்கு சேவையாற்றி பின்னர் 01.01.1952ல் திருகோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து தொடர்ந்து 1954ம் ஆண்டு தம்பலகாமம் இராம கிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் பணியாற்றி மீண்டும் 1955ம் ஆண்டு திருக்கோணமலை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து 1961ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். இறுதியாக திருக்கோணமலை புனித பிரான்சிஸ் சவேரியர் பாடசாலைக்கு 1961ல் இடமாற்றம் பெற்று 43வது வயதில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதற்கிடையில் 1953ம் ஆண்டு இராசநாயகி என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்து 1955ம் ஆண்டு கதிர்காமநாதன் என்ற மகனைப் பெற்றெடுத்து பல பட்டங்கள் பாராட்டுகள் கிடைத்தபோதும் எவற்றையும் தன் பெயரின் முன் சேர்க்காமல் எளிமையாக காந்தியின் வழியில் திருகோணமலை முத்துக்குமார சுவாமி கோவிலின் முன்பாக அமைந்துள்ள சிறிய வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் சுகவீனம் காரணமாக 03.02.2017 அன்று இறை பணிக்காக இறைவனடி சேர்ந்தார்.


Resources

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 55-61
  • நூலக எண்: 13385 பக்கங்கள் 03-05