ஆளுமை:ஜீவரஞ்சனி, விவேகானந்தராசா

From நூலகம்
Name ஜீவரஞ்சனி
Pages அரசரத்தினம்
Pages செல்லம்மா
Birth 1970.10.09
Place வட்டக்கச்சி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜீவரஞ்சனி, விவேகானந்தராசா கிளிநொச்சி வட்டக்கச்சியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அரசரத்தினம்; தாய் செல்லம்மா. ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கிளிநொச்சி வட்டக்கச்சி மத்தியக்கல்லூரியில் கற்றார். யாழ் பல்கலைக்கழக தமிழ் சிறப்பு கலைமாணிப் பட்டத்தை பெற்றுள்ளார்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர் ஜீவரஞ்சனி. ஆசிரியரான இவர் தேசிய கல்வி நிறுவக கல்விமாணிப்பட்ட கற்கை நெறியின் தமிழ்பாட விரிவுரையாளர். வட்டக்கச்சி மத்தியக் கல்லூரியின் வைரவிழா கீதத்தையும், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் பாடசாலைக் கீதத்தையும் இயற்றியுள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலய உயர்தர மாணவர் மன்றத்தின் வெளியீடான இராமநாதம் வருடாந்த சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவும் உள்ளார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா மலரின் இதழாசிரியராகவும் உள்ளார் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் மித்திரன், உதயன், சூரியகாந்தி ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. இவரின் சிறுகதை, கட்டுரைகள், பாடல்கள் போட்டிகளில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளன. அண்மையில் நெருஞ்சிமுள் என்ற சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார். மிக விரைவில் மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

விருதுகள்

வடமாகாண கல்வி அமைச்சின் குரு பிரதிபா பிரபா நல்லாசிரியர் விருது 2018ஆம் ஆண்டு.


குறிப்பு : மேற்படி பதிவு ஜீவரஞ்சனி, விவேகானந்தராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.