ஆளுமை:டொமினிக் ஜீவா, ஆவுறம்பிள்ளை
From நூலகம்
| Name | டொமினிக் ஜீவா |
| Pages | ஆவுறம்பிள்ளை |
| Pages | யோசப் மரியம்மா |
| Birth | 1927.06.27 |
| Pages | 2021.01.28 |
| Place | யாழ்ப்பாணம் |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
டொமினிக் ஜீவா, ஆவுறம்பிள்ளை (1927.06.27 - 2021.01.28 ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாசிரியர். இவரது தந்தை ஆவுறம்பிள்ள; தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
இவர் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY என்ற மொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
Resources
- நூலக எண்: 300 பக்கங்கள் 119-121
- நூலக எண்: 2017 பக்கங்கள் 16-23
- நூலக எண்: 4695 பக்கங்கள் 42
- நூலக எண்: 9597 பக்கங்கள் 25-27