ஆளுமை:பெரிய ஐங்கரன்
From நூலகம்
Name | பெரிய ஐங்கரன் |
Birth | 1981.10.11 |
Place | புலோலி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பெரிய ஐங்கரன் (1981.10.11 - ) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டதாரியான இவர், தனியார் கல்வி நிலையமொன்றில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதிவருகின்றார். இவரது படைப்புக்கள் சங்குநாதம், சுடர் ஒளி, மெட்ரோ நியூஸ், புதியதரிசனம், ஞானம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் அகில இலங்கை இளங்கோ கழகத்தின் உறுப்பினராக இருந்ததுடன் திருவிளையாடல், பாஞ்சாலிசபதம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி, காத்தவராயன் ஆகிய நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 1203 பக்கங்கள் 33