ஆளுமை:மதுபாஷினி, ரகுபதி

From நூலகம்
Name மதுபாஷினி
Birth 1968
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதுபாஷினி, ரகுபதி (1968 - ) திருகோணமலையில் பிறந்த எழுத்தாளர்; விரிவுரையாளர். திருகோணமலை புனித சவேரியார் வித்தியாலயத்தில் கல்வி கற்றார். தமிழ்நாட்டின் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டமும் அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

இவர் ஆழியாள் என்னும் புனைபெயரில் கவிதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகியவற்றை எழுதிவருகிறார். மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் போன்ற இதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. உரத்துப் பேச, துவிதம், கருநாவு ஆகியன இவரது கவிதை நூல்கள். இவரது கவிதைகள் கன்னடம், மலையாள மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Resources

  • நூலக எண்: 176 பக்கங்கள் (அட்டை)

வெளி இணைப்புக்கள்