ஆளுமை:மைதிலி,தேவராஜா

From நூலகம்
Name மைதிலி
Pages செல்லத்தம்பி மகேஸ்
Pages வேதநாயகி
Birth 06.02.1971
Place யாழ்ப்பாணம்
Category சிறுவர் எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைதிலி தேவராஜா (1971.02.06) யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவில் பிறந்தவர். இவரது தந்தை செல்லத்தம்பி மகேஸ்; தாய் வேதநாயகி. ஆரம்பக் கல்வியை நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை யாழ் உடுவில் மகளிர் கல்லூரியிலும் கற்றார். 1992ஆம் ஆண்டு அரசாங்க பரீட்சையில் சித்தி பெற்று ஆசிரியர் பணியில் மைதிலி தேவராஜா இணைந்துகொண்டார். தொடர்ந்து பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி, பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா நிறைவு செய்த பின்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழத்தில் ஆசிரியர் கல்வியில் முதுமாணிப் பட்டதாரி. 2011ஆம் ஆண்டு ஆசிரியர் ஆலோசகர் பரீட்சையில் சித்தி பெற்று ஆசிரிய ஆலோசகராக 2014ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து யாழ் கல்வி வலயத்தில் ஆரம்பக்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளராக பணியாற்றி தற்பொழுது யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் உப அதிபராகக் கடமையாற்றி வருகிறார். இவர் சிறுவர் கதைகள், கல்விசார் கட்டுரைகள் போன்றவை பத்திரிகைகளுக்கு எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 11520 பக்கங்கள் 04
  • நூலக எண்: 11535 பக்கங்கள் 04

[