ஆளுமை:ஷகிலா, முஹம்மது அபுசாலி

From நூலகம்
Name ஷகிலா
Pages முஹம்மது அபுசாலி
Pages பத்திலா உம்மா
Birth 1974.08.09
Pages 2019.06.26
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷகிலா, முஹம்மது அபுசாலி (1974.08.09) திருகோணமலையில் பிறந்த எழுத்தாளர். இவரது முஹம்மது அபுசாலி; தாய் பத்திலா உம்மா. ஷகி என்னும் புனைபெயரில் எழுதி வருகிறார் எழுத்தாளர். இவர் ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை திருகோணமலை அல் அஸ்ஹர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். மாகாணசபை உதவி எழுதுவினைஞராக 1994ஆம் ஆண்டு தொடக்கம் 1995ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இவர் நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார். 2008ஆம் ஆண்டு இவர் எழுத்துத்துறைக்குப் பிரவேசித்துள்ளார். 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவரது கவிதைகள் தினக்குரல், மெட்ரோ, தினமுரசு, உதயன், மித்திரன், நீங்களும் எழுதலாம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆணாதிக்க சிந்தனைகளின் இறுக்கமான பிடியில் இவரது பேனாமுனை சிறிது காலம் ஓய்வெடுத்திருந்தது. பின்னர் 2015ஆம் ஆண்டு மீண்டும் எழுதத் தொடங்கினார். கல்கி, வல்லமை, நடு, படைப்பு, படிகள், சிலம்பு, கலைமுகம் போன்ற சிற்றிதழ்களில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. நிறங்கள் உதிர்க்கும் இரவு கவிதைத் தொகுப்பினை 2017ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஷகி.

குறிப்பு : மேற்படி பதிவு ஷகிலா, முஹம்மது அபுசாலி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.