ஆளுமை: அபிராமி கைலாசபிள்ளை

From நூலகம்
Name அபிராமி
Pages சுப்பிரமணியம்
Pages பறுவதவர்த்தினி
Birth 1943.06.14
Pages -
Place கொழும்பு.
Category பழைய மாணவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் 1943.06.14 ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது கொழும்பில் வசிக்கின்றார். இவரது தந்தை சுப்பிரமணியம் , தாய் பறுவதவர்த்தினி ஆவார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை அராலி சரஸ்வதி வித்தியாலயத்திலும் பின் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவராக விளங்குகின்ற திருமிகு வி. கயிலாசபிள்ளை அவர்களின் துணைவியாரான இவர் ஏ. சி. எஸ் ரெக்னோலொஜிஸ் என்கின்ற கணனிக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராகவும் விளங்குகின்றார். எமது சகோதரப் பாடசாலையான யாழ். இந்துக் கல்லூரி வளர்த்தெடுத்த புகழ் பூத்த மைந்தரில் ஒருவரும், பட்டயக்கணக்காளருமான திரு. வி. கயிலாசபிள்ளை அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கணவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நின்றதுடன் பல துறைகளிலும் தன்னால் ஆற்றக்கூடிய பணிகளை ஆற்றி வருகின்றார். திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபையின் துணைப் பொருளாளராகவும் விளங்கி அரிய சமயப்பணியையும், சமூகத் தொண்டினையும் ஆற்றி வருகின்றார். விளம்பர விருப்பமின்றி எண்ணிலடங்கா சமூகசேவைகள் பலவற்றை ஆச்சரியப்படும் வகையில் ஆற்றி வரும் இவர் தான் கல்வி கற்ற யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கம், கொழும்பின் தலைவியாக விளங்கி, கல்லூரியின் வளர்ச்சிக்கு பெருந் தொண்டாற்றி வருகின்றார். மேலும் வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களது கூட்டமைப்பின் பொருளாளராக விளங்கி, கடும் போரினால் கட்டிடங்களையும், பிறவளங்களையும் இழந்த பல தமிழ்ப் பாடசாலைகளின் புனர்நிர்மாண நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாகப் பணியாற்றியும் வருகின்றார். அகில இலங்கை இந்துமாமன்றத்தின் 'ஆதரவற்றோர் விடுதிகள் இல்லக்குழுவின் செயலாளராக பொறுப்பேற்று மன்னார் சித்தி விநாயகர் இல்லம், இரத்மலானை இந்துக்கல்லூரி ஆண்கள்விடுதி, இரத்மலானை சக்தி இல்லம், இரத்மலானை செல்வா இல்லம், முதலிய இல்லங்களில்' ஆதரவற்ற மாணவச் சிறுவர்கள் எவ்வித குறையுமின்றி நல்லநிலையில் பராமரிக்கப்படுவதற்கு மிகக்கடுமையாக உழைத்துவரும் இவர்பணி போற்றுதற்குரியது. இவ்வாறே தான் உறுப்பினராக அங்கம் வகிக்கும் மனிதநேய நம்பிக்கை நிதியத்தினூடாக முல்லைத்தீவு இனியவாழ்வு இல்லம், கிளிநொச்சி யோகர்சுவாமி திருவடி நிலையம், கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமவிடுதி, கிளிநொச்சி வலுவிழந்தோர் இல்லம், முதலிய ஆதரவற்றோர் நலன்பேணுகை நிலையங்களின் செம்மையான, தொடர்ந்த செயற் பாடுகளுக்கு முதுகெலும்பாய்த் திகழ்ந்து அயராது பாடுபட்டும் வருகின்றார். மேலும் இவர் அங்கவீனச் சிறுவர்கள் இல்லத்தின் உபதலைவராக விளங்கி அச்சிறுவர்களை உகந்தமுறையில் பராமரிக்கும் நடவடிக்கையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. தான் சார்ந்த இந்துமதத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பை நல்கிவருகின்ற திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அவர்கள் கொழும்பு இந்துமகளிர் மன்றத்தின் போஷகராக இருந்து வருவதோடு திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபையின் இணைப்பொருளாளராகவும் விளங்கி வருகின்றார். இவர் அங்கம் வகிக்கும் தற்போதைய திருப்பணிச்சபை, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கருங்கற் திருப்பணியை மீளமுன்னெடுத்து வருகின்றது. போர்க்காலச் சூழ்நிலையில் துன்பப்பட்ட கல்லூரி மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் 1999ம் ஆண்டு மாணவிகளை கொழும்பிற்கு அழைத்து கலைநிகழ்வொன்றினை நடாத்தி அவர்களுக்கு வெளியுலகைக் காட்டுவதில் முன்னின்று உழைத்தார். சுவாமி சாந்தானந்தா அவர்களிடம் பக்தி கொண்ட இவர் சிறந்த சமயப்பற்றுள்ள இல்லத்தரசியாவார். தன் அன்பாலும், பண்பாலும் உலகனைத்திலும் உறவையும், நட்பையும் வளர்த்தெடுத்த இவ் அன்னை தன் தனிப்பட்ட அவ்வன்புத் தொடர்புகளை இந்நாட்டில் துயருறும் ஆதரவற்றோருக்கு ஆக்கி தன்னை வெளிப்படுத்தாது, தன்னடக்கத்தோடு செய்துவரும் தொண்டுகள் அளப்பரியன. சமூகசேவையாளராய் தன்னை இனம்காட்டும் நோக்கமில்லாது அன்பு நிறைந்த நெஞ்சத்தால் அனைவருக்காகவும் தன்நோயையும் கருதாது தொண்டாற்றும் தூயர் இவர். இவ்வாறு தியாகமனப்பான்மையோடும், கருணையோடும் இலைமறைகாயாய் நின்று தன்னலமற்று பல சமுதாயப் பணிகளை ஆற்றி வருகின்ற திருமதி அபிராமி கயிலாசபிள்ளை அவர்களை இந்நாட்டின் தமிழ் மக்கள் சார்பாக, கொழும்புக் கம்பன் கழகம் தான் நிறுவியுள்ள சாதனையாளருக்கான உலகளாவிய விருதாகிய 'கம்பன் புகழ்” விருதினை வழங்கி தனது 2005ஆம் ஆண்டுக் கம்பன் விழாவில் கௌரவித்து மகிழ்கிறது.

இவர் 1954 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரைக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். யாழ் இந்து மகளிர் கல்லூரி இவர் பிறந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது . இவர் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தில் 1993 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சேவையாற்றி வருகின்றார். வறுமைக் கோட்டில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்தார். ஐந்து பழைய மாணவர் சங்கங்கள் எல்லாம் சேர்ந்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 3 மாடிக் கட்டடடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கல்விகள் எல்லாப் பாடங்களிலும் கற்பிக்கப்ப்ட்டதாகவும், இப்பாடசாலையின் ஆடைகள் பாவடை சட்டை தாவணி உடுத்து பாடசாலைக்கு சென்றார்கள் எனவும் கூறப்பட்டது.

இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில் அருந்ததி இல்லத்தில் இருக்கும் போது அவ் இல்லத்தின் தலைவராக இருந்தார். தலைவராக இருக்கும் போது முதலாவதாக வருவதற்கு பெரும் பாடுபாட்டார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் விடுதிகளில் தங்கி கல்வி கற்று வந்தார்கள். பண்டாரவளை , கொழும்பு போன்ற இடங்களில் இருந்து விடுதிகளில் தங்கினார்கள். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது ஆரம்பிக்கும் நேரம் 8.30 ஆகவும் 2.30 க்கு முடியும் . அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு நடந்து சென்றே கல்வியினை பயின்ரார். பழையமாணவர் சங்கம் மூலமாக யாழ் நாதம் என்னும் இதழ்கள் வெளியிடப்பட்டது. கொழும்பு பழைய சங்கத்தி இவர் நீண்ட காலமாக சேவை ஆற்றி வருகின்றார்.