செம்மணி

From நூலகம்
செம்மணி
416.JPG
Noolaham No. 416
Author -
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher வெளிச்சம் வெளியீடு
Edition 1998
Pages iv + 48

To Read

நூல்விபரம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கான கவிதைகள் இவை. வெளிச்சம் வெளியீட்டுத் தொடரின் 3வது நூல். 1995இல் ரிவிரச என்ற யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின்பின், தென்மராட்சியிலும்் வடமராட்சியிலும் தஞ்சமடைந்த தமிழ்மக்களை மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைமூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அக்காலகட்டத்தில்் சிங்கள இராணுவம் அவர்களை யாருங்காணாமற் பிடித்துச்சென்று படுகொலைசெய்து செம்மணியிற் புதைத்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. செம்மணிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன.


பதிப்பு விபரம்
செம்மணி. 24 கவிஞர்களின் கவிதைகள். தமிழீழம்: வெளிச்சம் வெளியீடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகம், நடுவப் பணியகம், 2வது பதிப்பு, நவம்பர் 1999, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1998. (புதுக்குடியிருப்பு: வவுனியா வடக்கு ப.நோ.கூ. சங்கப் பதிப்பகம்). iv + 48 பக்கம், விலை: ரூபா 50. அளவு: 20.5 *13 சமீ.

-நூல் தேட்டம் (# 1464)