நிறுவனம்:யாழ்/ இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம்
From நூலகம்
Name | யாழ்/ இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம் |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | இளவாலை |
Address | இளவாலை, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சூசைச் சட்டம்பியார் நடாத்திவந்த இளவாலை மறைமாவட்ட பங்குப்பாடசாலை 1896ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13ஆம் நாள் புதிய மனையில் பெண் பிள்ளைகளுக்கான பாடசாலையாக இப் பாடசாலை தனித்து இயங்கத் தொடங்கியது. 1901ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 1923ஆம் ஆண்டு 5ஆம் வகுப்புவரை ஆங்கிலக்கல்வி புகட்டப்பட்டு 1930இல் கனிஷ்ட பிரிவுவரை இயங்கிவந்தது. பின்னர் 1959ஆம் ஆண்டுகளில் க.பொ.த.உ. வரை ஆரம்பிக்கப்பட்டது.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 58-61