நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி

From நூலகம்
Name யாழ்/ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place தெல்லிப்பளை
Address தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website www.mahajanacollege.net

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாவலர் துரையப்பாப்பிளையின் கடின உழைப்பின் பலனாக ஆரம்ப கல்விப் பிரிவாக சரஸ்வதி வித்தியாலயத்தையும், பின்னர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே அதன் அருகே உயர் கல்விக்காக ஒரு கட்டிடத்தையும் அமைத்து 1929 ஆம் ஆண்டு காலமானார்.

அவர் விட்டுச் சென்ற பணியைத் கா. சின்னப்பா அவர்கள் தனது அயராத உழைப்பால் இப் பாடசாலையை வளர்ச்சியடையச் செய்ததோடு 1935ஆம் ஆண்டு இப் பாடசாலையின் வெள்ளி விழாவையும் நடத்தி வைத்தார். அத்தோடு அதுவரை காலமும் ஆண்கள் மட்டுமே கல்வி கற்ற பாடசாலையில் பெண்களும் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும் என எண்ணி பெண்களாஇயும் இணைத்துக் கொண்டார்.

அவரின் மறைவைத் தொடர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றிய ரி. ரி ஜெயரட்ணம் அவர்கள் அதிபராகப் பதவி ஏற்று இரண்டு பிரிவாக இயங்கிய பாடசாலையை ‘மகாஜனா’ என்ற பெயரைச் சூட்டி ஒரு படசாலையாகக் கொண்டு வந்தார்.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 88-94

வெளி இணைப்புக்கள்