நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிவன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிவன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place புங்குடுதீவு
Address 3ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவ் ஆலயத்தை தோற்றுவித்தவர் தம்பையா மார்க்கண்டேயக் குருக்கள் என்பவராவார்.

1923ஆம் ஆண்டு தம்பையா மார்க்கண்டேயக் குருக்கள் அவர்கள் இந்தியாவிற்குச் சென்று காசி நகரிலே கங்கையில் நீராடும் போது உருண்டை வடிவமான ஏதோ ஒன்று அவர் கையில் சிக்கியது. அது ஒரு சிவலிங்கமாக இருக்கக் கண்ட அவர் அதனை எடுத்துவந்து புங்குடுதீவில் தனக்கு சொந்தமான இடத்திலேயே கோவிலை அமைக்க வேலைகள் செய்தார். 1928ஆம் ஆண்டில் இவர் சிவபதம் அடைய, பின்னர் இவருடைய மனைவி செல்லம்மா அவர்கள் தனது மகனோடும் வேறு பலரது உதவியுடனும் இக் கோவிலை கட்டி முடித்தார்.

1933ல் முதன் முதலாக கும்பாபிஷேகம் செய்வித்தார். 1961, 1977,2005 ம் ஆண்டுகளில் 33 ஹோம குண்டலங்களுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பங்குனி உத்தரத்தை தீர்த்தமாகக் கொண்டு 11 நாட்கள் உயர் திருவிழா நடைபெறும். தினமும் 6 காலப் பூசை நடைபெறுகிறது.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 85-87
  • நூலக எண்: 5274 பக்கங்கள் 161-164