நிறுவனம்: நுண்கலை மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

From நூலகம்
Name நுண்கலை மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
Category மன்றங்கள்
Country -
District -
Place -
Address -
Telephone {{{தொலைபேசி}}}
Email {{{மின்னஞ்சல்}}}
Website {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் நுண்கலை மன்றமானது மாணவர்களிடையே காணப்படுகின்ற கலை ஆற்றலை வளர்க்கும் முகமாக உருவாக்கப்பட்டது. அதாவது நல்ல கவின்கலைகளைப் பிரித்தறிந்து இரசிக்கும் பண்பை வளர்ப்பதோடு எமது பண்பாட்டு விழுமியங்களை கலைத்துவமாக வெளிப்படுத்தக்கூடியதான சூழல் ஒன்றை உருவாக்கி நல்லனவற்றையே எங்கும் எப்போதும் காணும் மனப்பக்குவத்தை வளர்ப்பதுமே இம் மன்றத்தின் குறிக்கோள் ஆகும். இம் மன்றங்களின் செயற்பாடுகளில் சில உதாரணங்களை நோக்குவோம்.

இதன் மூலம் இசை, நடனம், சித்திரம், நாடகம் ஆகியவற்றின் திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன.

இம்மன்றமானது வகுப்பு மட்டத்தில் வினாவிடைப் போட்டிகள், சித்திரக் கண்காட்சி, கொத்தணி, கோட்ட மட்டத்திலான பண்ணிசைப் போட்டிகள், இசை, நடன, நாடகப் போட்டிகள் என்பவற்றில் மாணவர்களைப் பயிற்றுவித்து பங்குபற்றச் செய்து வெற்றியீட்டியமை இம்மன்றத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியே.

இம் மன்றத்தின் மூகமாக 2003 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் கொழும்பு பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் தற்காலிக நடன ஆசிரியையுமான திருமதி சாவித்திரி மதிரூபனின் நெறியாள்கையில் "தர்மம் வெல்லும்" என்னும் நாட்டிய நாடகம் மேடையேற்றப்பட்டு பலரினதும் பாராட்டுக்களைப் பெற்று யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பெருமைதேடிக்கொடுத்தது.

தமிழ்த்தின விழாக்களின் போது இசைநடனப் போட்டிகளில் மாணவிகளை வழிப்படுத்த இம்மன்றம் பெரிதும் உழைக்கின்றது.

2003 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் கொழும்பு பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எமது கல்லூரியின் பழைய மாணவியும் தற்காலிக நடன ஆசிரியையுமான திருமதி சாவித்திரி மதிரூபனின் நெறியாள்கையில் "தர்மம் வெல்லும்" என்னும் நாட்டிய நாடகம் மேடையேற்றப்பட்டு பலரினதும் பாராட்டுக்களைப் பெற்று எமது கல்லூரிக்குப் பெருமைதேடிக்கொடுத்தது.

தமிழ்த்தின விழாக்களின் போது இசைநடனப் போட்டிகளில் மாணவிகளை வழிப்படுத்த இம்மன்றம் பெரிதும் உழைக்கின்றது.

2004ஆம் ஆண்டு கோட்ட மட்ட தமிழ்மொழித் தினப் போட்டிகளில் அனைத்துப் பிரிவுகளினதும் தனியிசை, குழுஇசை, தனிநடனம், குழுநடனம் என்பனவும் நாட்டிய நாடகமும் முதலாம் இடத்தைப் பெற்று சான்றிதழ்களைப் பெற்றதுடன் வலயமட்டப் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு யாழ் கல்வி வலயத்தால் நடாத்தப்பட்ட பண்ணிசை மற்றும் சகலகலாவல்லிமாலைப் போட்டிகளில் 1ம் 2ம் இடத்தையும் தனியார் சபைகளினால் நடாத்தப்பட்ட பண்ணிசைப் போட்டிகளிலும் பங்குபற்றித் தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

பாடசாலை மட்டத்தில் நடைபெறும் விழாக்களுக்கு இம் மன்றமானது தன்னால் இயன்ற ஒத்துழைப்பும் வழங்கிவருகின்றது