அவளுக்கு ஒரு வேலை வேண்டும்

From நூலகம்
அவளுக்கு ஒரு வேலை வேண்டும்
434.JPG
Noolaham No. 434
Author இளங்கீரன்
Category தமிழ் நாவல்கள்
Language தமிழ்
Publisher தேசிய கலை இலக்கியப் பேரவை
Edition 2000
Pages 6 + 324

To Read

நூல்விபரம்

இளங்கீரனின் அரசியல் சமூக உணர்வினதும் சமூகச் செயற்பாட்டினதும் உச்சநிலையை அடையாளம் காட்டும் ஒரு காலத்திற்குரிய நாவல். மனித உறவுகள் மீது, சமுதாய ஏற்றத் தாழ்வுகள் செலுத்தும் தாக்கத்தையும் சமுதாயச் சூழலையும் புறக்கணித்து நாம் ஒழுக்கங்களைப் பற்றியும் அறம் பற்றியும் விதிகளை வகுக்க இயலாது, காதல், கற்பு போன்ற விடயங்களில் நம் மீது ஒருபுறம் மரபின் வழியில் ஏற்றப்பட்டுள்ள சுமைகளையும் மறுபுறம் வணிகக் கலை இலக்கியங்கள் ஏற்படுத்தி வருகின்ற மயக்கங்களையும் நாம் கவனமாகவும் உறுதியாகவும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இளங்கீரனின் நாவல்களில் இவ்வாறான கவனிப்புப் பொதுவாகவே உள்ளது. கொழும்பு நகர வாழ்வில் உழைத்து உண்ணும் தேவையில் உள்ள கீழ் நடுத்தர வகுப்புப் பெண்கள் தொடர்பான இக்கதையில் வரும் நிகழ்வுகள் பல ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள் பிந்திய இன்றைய நவ கொலனியச் சூழலிலும் யதார்த்தமானதாகவே உள்ளன.


பதிப்பு விபரம்
அவளுக்கு ஒரு வேலை வேண்டும். சுபைர் இளங்கீரன். கொழும்பு 11: சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் புத்தக நிலையம், இல.ளு 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஆனி 2000. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்) 6 + 324 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21 * 14 சமீ.