ஆளுமை:இராமநாதன், வைத்தியலிங்கம்

From நூலகம்
Name இராமநாதன்
Pages வைத்தியலிங்கம்
Birth 1939.05.22
Place முல்லைத்தீவு, முள்ளியவளை 2ஆம் வட்டாரம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமநாதன், வைத்தியலிங்கம் (1939.05.22) முல்லைத்தீவு முள்ளியவளை, 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர். . இவரது தந்தை இராமநாதன்; 1959ஆம் ஆண்டு கலைத்துறைக்குள் பிரவேசித்துள்ளார்.

நாடகங்களை எழுதுதல், நடித்தல், நாடகம் பழக்குதல், நாடகங்களை மேடையேற்றல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். மனிதா நீ, அரிச்சந்திரா, யார் செய்த குற்றம், கண்திறந்தது, சந்தர்ப்பம், அரக்கரை அழிப்போம், சங்கிலியன், தமிழன் கதை, பண்டாரவன்னியன், நீதிக்கு ஒருவன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

புனர் ஜென்மம், காத்திருப்பேன் காலம் வரை, தியாகத் துளிகள் ஆகிய நாடங்களை எழுதியுள்ளார். ஆலயங்களில் புராணபடல் சொல்ல் என்பனவற்றிலும் ஈடுபாடுகொண்டவர்.

இலங்கையின் பிரபல இயக்குநர் லெனின் மொறாயஸ் உதவியுடன் நெஞ்சுக்கு தெரியும் என்ற சினிமாஸ்கோப் படத்தை எடுத்தார். 1983ஆமு் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட வன்செயலின் போது ஹெந்தனையில் இருந்த விஜயா ஸ்ரூடியோ எரிக்கப்பட்டபோது திரைப்படம் தொகுக்கப்பட்ட நிலையில் எரிந்து போனது.