ஆளுமை:ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார்

From நூலகம்
Name ஏரம்பையர்
Pages சுப்பிரமணிய சாத்திரியார்
Birth 1847.02.29
Pages 1914.01.08
Place மாதகல்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏரம்பையர், சுப்பிரமணிய சாத்திரியார் (1847.02.29 - 1914.01.08) யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரியார். இவர் தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியையும் தமிழ், வடமொழியையும் சிறிது காலம் கற்றதுடன் சங்கானை வேலுப்பிள்ளை ஆசிரியர், நல்லூர்ச் சம்பந்தப் புலவர், நீர்வேலி சங்கர பண்டிதர், ஆறுமுகநாவலர், ஆகியோரிடம் தமிழிலக்கியம், இலக்கணங்கள், சித்தாந்த நூல்கள், சமஸ்கிருத நூல்கள் ஆகியவற்றைக் கற்றார்.

இவர் பல நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். நீதிசாத்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை வைரவரூஞ்சல், மாதகற் பிள்ளையாரூஞ்சல், காலிக் கத்ரேசரூஞ்சல், நகுலாசல புராணம் ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். வடமொழி நூல்களையும், நீதி சாஸ்திர நூல்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தார். பல தனிப் பாடல்களையும் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரமும் பாடியுள்ளார். இவர் கீரிமலையில் த. கைலாசபிள்ளை ஆரம்பித்த சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி தமிழும் சமஸ்கிருதமும் மாணவர்களுக்குக் கற்பித்தார்.

நிர்வாண தீட்சை பெற்ற இவர், வண்ணார்பண்ணையில் தொடங்கப்பெற்ற சைவபரிபாலன சபைக்கு சைவப் பிரசாகராகவும் ஆறுமுகநாவலர் வண்ணையில் நிறுவிய தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகவும் விளங்கினார். இவர் சைவப் பிரசங்கங்களை ஊர்கள் தோறும் செய்தார்.


Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 266
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51-53
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 118-122
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 49-56