ஆளுமை:ஐசக் தம்பையா

From நூலகம்
Name ஐசக் தம்பையா
Birth 1896.08.19
Pages 1941
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐசக் தம்பையா (1896.08.19 - 1941) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணம் அர்ச்.யோன் கல்லூரியிலே சில ஆண்டுகள் பயின்ற பின்னர் கொழும்புக்குச் சென்று அர்ச்.தோமஸ் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இவர் 1893 ஆம் ஆண்டு சிலோன் றிவியூ என்னும் பெயருடன் ஓர் ஆங்கிலத் திங்களிதழையும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் பீரியட் என்னும் பெயருடன் ஒரு பத்திரிகையையும் தொடங்கினார். 1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்று கிரேய்ஸ் இன் சட்டக் கலாசாலையில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுக் கொண்ட இவர், 1899 - 1901 வரை யாழ் நியாய துரந்தரராகத் தொழில் புரிந்துள்ளார். 1913 ஆம் ஆண்டு மலேசியாவுக்குச் சென்று தொழில் புரிந்து கொண்டிருந்த போது கிறிஸ்து சமய சாஸ்திரத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றுக் கொண்டார் .

Psalms of a Saiva Saint, Tamil Mystic, Forgleams of God, Erangelism in Ceylon, The Salt of the Earth, In the Days of Sambasiva, Golden Verse Collection of Ceylon ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 148-149