ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தையா

From நூலகம்
Name கணபதிப்பிள்ளை
Pages கந்தையா
Pages தையல்முத்து
Birth 1918
Pages 1975.11.14
Place வேலணை
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, கந்தையா (1918 - 1975.11.14) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் தையல்முத்து. வேலணை அமெரிக்கமிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், மெற்றிக்குலேசன் பரீட்சையிலும் சித்தியடைந்தார். வேலணை வாத்தியார் என அழைக்கப்படும் இவர், 1946 - 1947 காலப் பகுதியில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் சேர்ந்து விசேட சித்தி பெற்று வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்றவற்றில் பணியாற்றினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராகப் பணியாற்றியதோடு பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

1952 இல் பண்டிதர் பரீட்சையில் சித்தி பெற்று திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் மேல் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களை ஏழு வருடங்கள் கற்பித்தார். 1960 இல் கலை முதற் தேர்வுப் பரீட்சையிலும் 1964 இல் அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கரம்பன் சண்முகநாதன் மகா வித்தியாலய உப அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் நாராந்தனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சியிலும் பெண்களின் வேலை வாய்ப்பிலும் அதிக அக்கறை செலுத்தினார். 1958 இல் தான்தோன்றி மனோன்மணி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தினார்.

Resources

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 336-339