ஆளுமை:கணபதியாபிள்ளை, வீரவாகுப்பிள்ளை

From நூலகம்
Name கணபதியாபிள்ளை
Pages வீரவாகுப்பிள்ளை
Pages அம்மணி
Birth 1910.01.10
Pages 1987
Place மதுரா, இந்தியா
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதியாபிள்ளை, வீரவாகுப்பிள்ளை (1910.01.10 - 1987) இந்தியா, மதுரா நகரத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக்கலைஞர். இவரது தந்தை வீரவாகுப்பிள்ளை; தாய் அம்மணி. இவர் தமது ஆரம்பக் கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று கொண்டிருக்கையில் இடையில் கல்வியை நிறுத்திவிட்டு மிருதங்க வாத்தியம் பயில ஆரம்பித்தார். இவருக்குக் குருவாக ஒருவரும் இருக்கவில்லை. தாமாகவே சிறு சிறு கச்சேரிகள், கூத்து, நடனம் என்பவற்றிற்குப் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்துப் பெரிய வித்துவான்களின் கலை நுட்பத்தைப் பின்பற்றித் தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார்.

இவர் இந்தியாவிலிருந்து 1932 ஆம் ஆண்டு என். எஸ். கிருஷ்ணனுடன் இலங்கை வந்தார். இங்கு வந்து சிறு சிறு கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்த போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிரந்தரமற்ற அதிதிக் கலைஞனாக இணைந்து கொண்டார். பின்னர் 1944 தொடக்கம் 1952 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிரந்தர நிலைய வித்துவானாகினார். வானொலிக் கலைஞனாக மட்டும் நின்றுவிடாமல் மிருதங்கம், டோலக், கஞ்சிரா, கடம், டோல்கி, தபேலா ஆகிய வாத்தியங்களையும் வாசித்து வந்தார்.

இவர் யாழ்ப்பாணத்தில் பிரம்மஶ்ரீ வை. நித்தியானந்தசர்மா அவர்களின் கதாப்பிரசங்கம், ஈழத்துச் சுந்தராம்பாள் என்னும் கனகாம்பாள் சதாசிவம் அவர்களின் பக்தி இசை, வி.ரீ.வி சுப்பிரமணியம் அவர்களின் பண்ணிசை ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் மேலும் சில முதுகலைஞர்களின் இசையரங்குகளுக்கும் மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களைப் பக்கவாத்தியமாக 1982 ஆம் ஆண்டு வரை வாசித்துள்ளார். இவருக்குக் 'கரவேகசுரஞானபூபதி' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Resources

{{வளம்|7474|39-41}