ஆளுமை:கணேசன், பொன்னையா

From நூலகம்
Name கணேசன்
Pages பொன்னையா
Birth 1952.04.03
Place கோண்டாவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசன், பொன்னையா (1952.04.03 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக்கலைஞர். இவரது தந்தை பொன்னையா. கானமூர்த்தி குழுவில் தவில் கலைஞராக இருந்து தவில் வாசிக்கும் இவர், பரம்பரை பரம்பரையாக இக்கலைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றார். இவர் தனது தந்தையிடம் தவில் கலையின் நுட்பங்களைக் கற்றறிந்து சிறந்த தவில் வித்துவானாக விளங்கி வருகின்றார்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஜேர்மனி, சுவிஸ்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் திறமையை வெளிப்படுத்திப் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இவரை, நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய நிர்வாகம் தவில்நாதமணி என்னும் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் இவர் 'லயஞான சுடரொளி' என்னும் விருதும் பெற்றவர்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 124
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 94