ஆளுமை:கணேஸ், சின்னதம்பி

From நூலகம்
Name கணேஸ்
Pages சின்னதம்பி
Pages சின்னம்மா
Birth 1931.09.22
Place புங்குடுதீவு
Category வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேஸ், சின்னதம்பி (1931.09.22 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர். இவரது தந்தை சின்னதம்பி; தாய் சின்னம்மா. இவர் ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு ஶ்ரீ சண்முகநாதன் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைத் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1951 இல் தமிழ் எஸ்.எஸ்.சி. பரீட்சையில் சித்தி பெற்றதோடு, கும்பகோணத்தில் நடைபெற்ற வைத்தியப் பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்றார். இலங்கை வைத்தியக் கல்லூரியிலும் பயின்று L.A.M.P. என்னும் பட்டத்தைப் பெற்றுப் பதிவு செய்யப்பட்ட மருத்துவரானார்.

ஆரம்பத்தில் புங்குடுதீவு அம்மா கடைச் சந்தியில் மருத்துவ நிலையத்தை (கிளினிக்) நடாத்திய இவர், பின்பு போக்கத்தையடியில் பெரிய மருத்துவ நிலையத்தை நிறுவி 1958 முதல் புங்குடுதீவு மக்களுக்கு மருத்துவ சேவையாற்றினார்.

1960 - 1964 காலப்பகுதியில் புங்குடுதீவின் கிராம சபையில் 9 ஆம் வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 1964 ஆம் ஆண்டு தொடக்கம் 10 ஆண்டுகள் புங்குடுதீவு மத்தி - கிழக்குக் கிராம முன்னேற்றச் சங்கங்களின் தலைவராகக் கடமையாற்றினார். இவருக்கு 1974 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சமாதான நீதவான் பட்டம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு கிராமோதய சபைத் தலைவராகவும் பின்பு பிரதேச சபைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். 1960 ஆம் ஆண்டு புங்குடுதீவு ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்திப் பல வீரர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 227