ஆளுமை:கந்தையா, ஆறுமுகம்

From நூலகம்
Name கந்தையா
Pages ஆறுமுகம்
Birth 1911
Place காரைநகர்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, ஆறுமுகம் (1911 - ) காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் ,சமாதான நீதவான். இவரது தந்தை ஆறுமுகம். இவர் ஆரம்பக்கல்வியை சாமி பள்ளிக்கூடத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

இவர் ஏழாலை வித்தியாசாலையில் ஆரம்பித்த ஆசிரியப் பணியை வவுனியா மகாவித்தியாலயம், காத்தான்குடி மத்தியகல்லூரி, வந்தாறுமூலை, நெல்லியடியில் உள்ள பாடசாலைகள் என இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி இறுதியில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

சைவமகாசபைத் தலைவராகி ஊருக்குப் பல தொண்டுகள் செய்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 328-329