ஆளுமை:கந்தையா, முத்தர்

From நூலகம்
Name கந்தையா
Pages முத்தர்
Birth 1917.04.07
Place ஏழாலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தையா, முத்தர் (1917.04.07 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முத்தர். இவர் சி.கணேஷ் ஐயர், அருளானந்தம் ஆகியோரிடம் கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவரான இவர், சமஸ்கிருதத்தில் கலைமாமணிப் பட்டம் பெற்றவர். சமயம், தத்துவம், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் சிறப்புப் பெற்ற இவர், சைவசமய தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

1936 ஆம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வரும் இவர், சுமாராக 18 நூல்களை கலை சார்ந்து வெளியிட்டதுடன், சமயம் சார்ந்து சைவ சித்தாந்த வகுப்புக்களையும் நடத்தியுள்ளார். சனாதன சைவ விளக்கம், சித்தாந்தச் செழும் புதையல்கள் (1978), சிவஞான சித்தித் திறவுகோல், சைவ மகத்துவம், சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி, சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல் மேதையின் சுவடுகள் ஆகியன இவரது நூல்கள். இவர் வசன நடையிலும், செய்யுள் நடையிலும் 30 இற்கும் மேற்பட்ட நூல்களையும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார். இவர் சைவ சித்தாந்த மன்றம் வெளியிட்டு வரும் 'அன்புநெறி' திங்கள் இதழுக்குப் பல கட்டுரைகளை எழுதியதுடன் மலர்க்குழுவிற்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

இவர் சைவசித்தாந்தப் பேரறிஞர், பண்டிதமணி, இலக்கியக் கலாநிநி, மகாமகோ உபாத்தியார் ஆகிய பட்டங்களையும், இந்து கலாச்சார அமைச்சின் பரிசு, சாகித்திய மண்டலப் பரிசு, வடக்கு- கிழக்கு மாகாண சாகித்தியப் பரிசு, இலக்கியக் கலாநிதி பண்டிதமணி நினைவுப் பரிசு, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பிறந்தநாள் நிதியப் பரிசு என்பவற்றையும் சான்றோருக்கான உயர் பரிசையும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 08
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 89-90