| Name | கமலா, பெரியதம்பி |
| Pages | நாகமுத்து |
| Pages | சிவகாமி |
| Birth | |
| Place | வல்வெட்டித்துறை |
| Category | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கமலா, பெரியதம்பி யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை நாகமுத்து; தாய் சிவகாமி. இவர் கொழும்பு, மட்டக்களப்பு, சிதம்பராக் கல்லூரிகளில் கல்வி கற்றார். இவர் பதினெட்டு வயதில் இசை ஆசிரியரானார். சென்னை வானொலி வித்துவான் எஸ். பாலசுப்பிரமணியத்திடம் சங்கீதம் கற்று, சென்னை அரசாங்க இசைப் பரீட்சை டிப்ளோமாப் பட்டம் பெற்ற்றார். வானொலி நாடகங்களை எழுதி நடித்தும் இருக்கின்றார்.
வீரகேசரி, தினகரன், சுதந்திரன் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். 19 சிறுகதைகள் "மாங்கல்யம்" தொகுப்பு நூலாக வெளிவந்தது. நீதிக் கதைகள் "ஆத்திசூடி" நூலாக வெளிவந்தது. இவரது தமிழ்க் கவிக் காவினிலே நூல் 21 கவிநயக் கட்டுரைகளைக் கொண்டது. தமிழ் நாட்டில் வெளியான பாமலர்கள் பலவற்றைக் கொண்ட, ஓர் இந்து சமயக் கதம்ப நூலாக "அருளும் ஒளியும்" காணப்படுகின்றது. இவர் கானக் குயில், செந்தமிழ் சொற்செல்வி, இரு கலை வல்லபி என்ற பட்டங்களைப் பெற்றவர். 1997 இல் தமிழர் தகவல் பத்திரிகை இலக்கியச் சேவை விருது பெற்றார்.
Resources
- நூலக எண்: 4192 பக்கங்கள் 68