ஆளுமை:கமலினி, சிவநாதன்

From நூலகம்
Name கமலினி, சிவநாதன்
Birth 1972.06.12
Place கல்முனை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலினி, சிவநாதன் (1972.06.12 - ) பாண்டிருப்பு, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர், ஒருங்கிணைந்த அஞ்சல்சேவை உத்தியோகத்தர். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி கற்றுள்ள இவர், அணையா விளக்கு சஞ்சிகையில் வாசமில்லா மலர்கள் சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து தொடர்ந்து 'தொலைவில் ஒரு கனவு' போன்ற பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மித்திரன், வாரசுரபி டொட்கொம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. அஞ்சல் நலன்புரி அமைப்பு, விபவி கலாச்சார மையம், யாத்திரா கவிதை இதழ் நடத்திய கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 'பரிணாமம்' என்ற இவரது சிறுகதை செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

Resources

  • நூலக எண்: 1037 பக்கங்கள் 07