ஆளுமை:குமார், சின்னையா

From நூலகம்
Name குமார்
Pages சின்னையா
Pages கதிராய்
Birth 1944.01.04
Pages 2020.01.27
Place தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமார், சின்னையா தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தில் பிறந்த ஆளுமை. இவரது தந்தை சின்னையா; தாய் கதிராய். மல்லிகை சி.குமார் என எல்லோராலும் அறியப்படுபவர். மலைப்பொன்னி என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை தலவாக்கலை சுமன மகாவித்தியாலயத்தில் கற்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் வார இதழினூடாக தமிழ்நாட்டில் வர்ணம் சித்திர கல்லூரியில் தபால் மூலம் சித்திரக்கலையை கற்றார். இவர் வரைந்த சித்திரம் சர்வதேச சரீதியில் விருது பெற்றள்ளது.

ஆரம்பத்தில் தோட்டதொழிலாளியாக இருந்த இவர் அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்ட கவிதைகளை எழுதியுள்ளார். தோட்டத் தொழிலை தூக்கியெறிந்துவிட்டு தலவாக்கலை நகரிலுள்ள கால்நடை வைத்தியசாலையில் கடமையாற்றினார். ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவத்தின் ஸ்தாபகர் ஜெப்ரி அபேசேகர ஊடாக வெளி உலகத்துக்கு அறிமுகமானார். அந்த நிறுவனத்திற்கான சிறந்த ஓவியங்களை இவர் வரைந்து கொடு்த்தார்.

சிறுவயதிலேயே இலக்கியத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, நாடகப்பிரதி எழுதுதல், நாவல், கட்டுரைகள் எழுதுதல், ஓவியம் வரைதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். இவரின் முதற் சிறுகதை 1962ஆம் ஆண்டு மதுவேட்டை என்ற தலைப்பில் வீரகேசரியில் பிரசுரமானது. அதனைத் தொடர்ந்து சிறுகதைகள் பல எழுதியுள்ளார். இவர் ஓவியங்கள் வரைவதிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், தினக்குரல், மல்லிகை, சிரி்த்திரன், இந்துமதி, ஈழமணி, ஈழகேசரி, மலைக்குருவி, மலைச்சாரல், கொழுந்து, பிரளயம், நமது மலையகம், அஞ்சலி, கொந்தளிப்பு, மலைமதி, பூரணி, தாயகம், சுடர் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

மலையக மக்களின் வலிகளை இவரின் ஆக்கங்கள் ஊடாக சமூகத்தின் கண்முன் கொண்டுவந்துள்ளார். இவரது ஆக்கங்களை மலையகம் சார்ந்தவையாக மட்டுமன்றி அனைத்து சமூகங்களினதும் வலியையும் தனது பேனாமுனையில் கொண்டுவந்துள்ளார். மாடும் வீடும் என்ற இவரின் கவிதை நூல் பலரின் பாராட்டையும் பெற்றது. மனுஷியம் என்ற சிறுகதை தொகுப்பினை 2001ஆம் ஆண்டு சாரல் வெளியீட்டகம் வெளிக்கொண்டுவந்தது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், மாகாணசபை, தினகரன் நடத்திய சிறுகதைகப் போட்டிகளில் பரிசும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.

விருதுகள்

தமிழ்மணி விருது

தமிழ்தொண்டன்

தமிழ் சாஹித்திய விருது

கலைமாமணி

கலாபூஷணம் – 2006.

படைப்புகள்

Resources

  • நூலக எண்: 10274-6 பக்கங்கள் {{{2}}}


வெளி இணைப்புக்கள்