ஆளுமை:குலரத்தினம், க. சி.

From நூலகம்
Name குலரத்தினம்
Birth 1916.10.10.
Pages 1994.02.06.
Place யாழ்ப்பாணம்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலரத்தினம், க. சி (1916.10.10 - 1994.02.06) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். பள்ளிக் காலத்தில் எழுத்தாற்றல் மிக்கவராக விளங்கிய இவர், மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தி பெற்றுக் கொழும்பு மாவட்டக் கச்சேரியில் இரண்டாண்டுகள் எழுதுனராகப் பணியாற்றிப் பின்னர் 1944 ஆம் ஆண்டு தொடக்கம் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று, 1944 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியிலும் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் கால் நூற்றாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றித் தனது ஐம்பதாவது வயதில் ஓய்வு பெற்றார்.

மில்க் வைற் செய்தி சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய நூல்களாக நோர்த் முதல் கோபல்லா வரை (அரசியல் நூல்) இந்து நாகரிகம் பனை வளம் என்பவை குறிப்பிடத்தக்கவையாகும்.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 12
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 60-62