ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், வல்லிபுரம்

From நூலகம்
Name சண்முகச்சட்டம்பியார்
Pages வல்லிபுரம்
Birth 1831
Pages 1885
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகச்சட்டம்பியார், வல்லிபுரம் (1831 - 1885) மட்டக்களப்பு, கோட்டை முனை, தாமரைக்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் கல்லாற்றில் வாழ்ந்து கொண்டிருந்த கார்த்திகேசுவிடம் தமிழ் இலக்கணவிலக்கியங்களைக் கற்றார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிஞராகத் திகழ்ந்த இவர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் வின்சன்ற் மகளிர் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகக் கடமையாற்றினார். மேலும் இவர் நைடதத்துக்கும் கந்தபுராணத்துக்கும் உரை வகுத்தெழுதினார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 99-100