ஆளுமை:சண்முகதாசன், நாகலிங்கம்

From நூலகம்
Name சண்முகதாசன்
Pages நாகலிங்கம்
Birth 1920
Pages 1993.02.08
Place நவாலி
Category அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகதாசன், நாகலிங்கம் (1920 - 1993.02.08) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த ஆசிரியர், அரசியல்வாதி. இவரது தந்தை நாகலிங்கம். இவர் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார். 1943 இல் பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக் கொண்டு தொழிற் சங்க இயக்கத்திலிணைந்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர அங்கத்தவரானார். கட்சி சீன சார்பு - சோவியத் சார்பு என்று பிரிந்ததைத் தொடர்ந்து 1964 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் அணியின் பொதுச் செயலாளரானார். இவர் சிறையிலிருந்த காலத்தில் "ஒரு மார்க்சியவாதியின் பார்வையில் இலங்கை வரலாறு" என்ற நூலை எழுதினார்.

பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக விளங்கிய காலம் முதல் புரட்சிவாதியாகச் செயற்பட்டு வந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியுள்ள இவர், மாக்ஸிசத் தத்துவங்களை ஏனையோருக்குச் சிறப்பாக எடுத்து விளக்கும் ஆற்றலும் விவாகத் திறனும் கொண்டிருந்தார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 14-19