ஆளுமை:சண்முகலிங்கம், அன்னலிங்கம்

From நூலகம்
Name சண்முகலிங்கம்
Pages அன்னலிங்கம்
Birth
Place
Category எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம், அன்னலிங்கம் 1993ஆம் ஆண்டு கலைத்துறையில் பிரவேசித்த இவர் எழுத்தாக்கம், கரகம், கும்மி, கோலாட்டம் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

கலைத்துறையுடன் சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்த இவர் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்திற்கு தனது எழுத்துருவாக்கத்தில் 12 பாடல்கள் கொண்ட பக்திகானம் எனும் சப்த கன்னிமார் இறுவெட்டை வெளியிட்டுள்ளார். கலை, இலக்கிய பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் 2017ஆம ஆண்டு கவிதாலயா நாடக மன்றத்தினால் கலைமணி எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பக்த கான இறுவெட்டுக்கான பாடல்களையும் எழுதி வருகிறார்.

விருதுகள்

கலைமணி

தேசகீர்த்தி

கவிக்கோன் கௌதாலய விருது