ஆளுமை:சத்தார், ஏ. எல். எம்.

From நூலகம்
Name அப்துல் லத்தீப் முகம்மது சத்தார்
Birth 1951.02.14
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தார், ஏ. எல். எம். (1951.02. 14 - ) களுத்துறை, பாணந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், கலைஞர். இவர் பாணந்துறை, களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் முல்லைப்பாணன், பரியாரி, ஈழ்மித்திரன் போன்ற புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், வரலாற்றுக்கதைகள், சிறுவர் தொடர்கதைகள், விமர்சனங்கள் எழுதியுள்ளார்.

இவரது முதலாவது கவிதையான 'தினபதியாம்' 1969 இல் தினபதி பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஹஸானாத் சஞ்சிகையில் செய்தியாளராகவும் நவமணி பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். உதயம் பத்திரிகையில் வளரும் பயிர் சிறுவர் பகுதிக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். புகைப்படங்கள் எடுப்பதிலும் சிற்பங்களைத் தயாரிப்பதிலும் ஈடுபாடு கொண்டவர். இவர் சொல்லின் செல்வன் என்னும் பட்டமும் ரத்தினதீப விருதும் பெற்றுள்ளார்.


Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 119-122

வெளி இணைப்புக்கள்