ஆளுமை:சத்தியபாமா, இராஜலிங்கம்

From நூலகம்
Name சத்தியபாமா, இராஜலிங்கம்
Pages குமாரசாமி
Pages கனகாம்பிகை
Birth 1926.11.21
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியபாமா, இராஜலிங்கம் (1926.11.21 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை குமாரசாமி; தாய் கனகாம்பிகை. இவர் யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட தராதரப் பரீட்சையில் சித்தியடைந்து சங்கீதத்தில் மேற்படிப்பிற்காக இந்தியா சென்று சென்னை ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில் கற்றுப் பின்னர் சங்கீதத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்காக குயீன்ஸ் மேரியில் இணைந்து கொண்டார். பட்டப்படிப்பின் முடிவில் நடந்த தேர்வில் சங்கீதத்தில் முதலிடம் பெற்ற ஐந்து மாணவிகளில் அதியுயர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

வட இலங்கை சங்கீத சபையை நிறுவிய முன்னோடிகளில் ஒருவரான இவர், இச்சபையின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1958 ஆம் அண்டு ஆவணி மாதம் இவரது அரங்கேற்றம் நிகழ்ந்தது. சங்கீத வித்துவான் தஞ்சாவூர் டி. எம். தியாகராஜனிடம் இசைக் கலையை முறைப்படி கற்றார். இவர் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இலங்கை வானொலியிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தினார். ஆன்மீகத்திலும் இசை ஞானத்திலும் திழைத்த அறிஞர் யோகி சுத்தானந்த பாரதியார், இவரது இசைத் திறமையைப் பாராட்டித் தாம் இயற்றிய 1015 பாடல்களடங்கிய சுத்தானந்த கீதாஞ்சலி என்ற நூலில் தனது கையொப்பமிட்டுப் பரிசளித்தமை குறிப்பிடத்தக்கது.

Resources

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 72-79