ஆளுமை:சத்யதேவன், சற்குணம்

From நூலகம்
Name சத்யதேவன்
Pages சற்குணம்
Pages தங்கேஸ்வரி
Birth 1984.01.20
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்யதேவன், சற்குணம் (1984.01.20 - ) ஓர் எழுத்தாளர். இவரது தந்தை சற்குணம்; தாய் தங்கேஸ்வரி. இவர் தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் மாணவராவார். தற்போது இலங்கை மின்சார சபையில் பணியாற்றுகின்ற இவர் வரலாறு, தமிழ் சமூக வரலாறு, மானிடவியல், தமிழிலக்கிய வரலாறு, சமூகவியல் போன்றவற்றில் ஆர்வமுடையவர்.

இவர் எஸ்.சத்யதேவன், சத்யன், ச.சத்தியதேவன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரை, ஆய்வு, பத்தி, விமர்சனம் ஆகிய துறைகளில் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மலைமுரசு முதலிய பத்திரிகைகளிலும் ஞானம், நீங்களும் எழுதலாம், கலை ஓசை, புதிய சொல் ஆகிய இதழ்களிலும் நீள்கரை ஆகிய இணைய இதழ்களிலும் எழுதி வருகிறார். சுன்னாகம் நூலக பொன்விழா மலரிலும் எழுதியுள்ளார். இவர் சனம், கலைஓசை, சமூக வெளி ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் அங்கத்தவராவார். தி.த. சரவனமுத்தப்பிள்ளையின் "தமிழ் பாஷை, தத்தைவிடு தூது மற்றும் ஏனைய பிரபந்தகளும்" நூலின் மீள் பதிப்பாசிரியர். தேசிய கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினரான இவர் சமூகவெளி படிப்பு வட்டத்துடனும் இணைந்து செயற்படுகின்றார்.