ஆளுமை:சத்யா, அமெரிகா சிங்
From நூலகம்
Name | சத்யா |
Birth | |
Place | மானிப்பாய் |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சத்யா, அமெரிகா சிங் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்த எழுத்தாளர். சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியராவார். இவர் ஒரு ஆங்கில மொழி நாவலாசிரியர் ஆவார். Touched By Jesus Ma.., I Promise, Ripples of Love ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். ஆன்மீக சார்ந்த படைப்புக்களாக இவரது படைப்புக்கள் இருக்கின்றன. ஆங்கில மொழியில் உள்ள இவரது புலமையைக் கொண்டு கதை எழுதும் நுட்பங்களின் ஊடாக வாசகர்களை கவரும் வகையில் உள்ளன. சத்யா தமது தெய்வ தரிசனங்களைத் தமது பாத்திரங்கள் வாயிலாக தமது இலகுவான நுட்பத்துடன் எழுதியிருப்பதாக எழுத்தாளரும் விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரன் தெரிவிக்கின்றார்.
Resources
- நூலக எண்: 6085 பக்கங்கள் 18-19