ஆளுமை:சந்திரகுமார், சுந்தரலிங்கம்

From நூலகம்
Name சந்திரகுமார்
Pages சுந்தரலிங்கம்
Pages இராசகுமாரி
Birth 1977.07.10
Pages -
Place அம்பிளாந்துறை, மட்டக்களப்பு
Category நுண்கலைத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரலிங்கம் சந்திரகுமார் (1977.07.10) இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் அம்பிளாந்துறை எனும் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் இடத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது தந்தை சுந்தரலிங்கம், தாய் இராசகுமாரி. இவரது மனைவி நியோமி. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை மட்/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். அத்துடன் தனது இளங்கலைமாணி, முதுகலைமாணி மற்றும் முதுத்தத்துவமாணி ஆகிய பட்டங்களினை முறையே கிழக்குப்பல்கலைக்கழத்திலே பெற்றுள்ளார். இவர் நுண்கலைத்துறை முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

இவர் இதுவரையில் நாடகமும் அரங்கியலும் 10,11, நச்சு மனிதன் நாடக நூல், யதார்த்த இலக்கியம் மற்றும் பகுப்பாய்வு நாடகம் முதலான ஏழுக்கு புத்தகங்களினையும், நாற்பதுக்கு மேற்பட்ட அரங்கக்கலை சார் ஆய்வுக்கட்டுரைகளினையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் அரங்கியல் கலையில் அதி தீவிரமாகச் செயற்பட்டு வரும் இவர் ஆற்றுகை மையக்கற்றல், அடிப்புறத்தில் இருந்து அடிப்புறத்திற்கு எனும் கோட்பாட்டு முன்மொழிவாளராகவும் கூட செயற்பட்டு வருகின்றார். இவரது ஆய்வுச் செயற்பாட்டின் அடியாக ‘அடிப்புற அரங்கச் செயற்பாட்டுப் பேரவை’ எனும் கலை அமைப்பினை நிறுவி அதன் பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அத்துடன் இதுவரையில் இவர் பண்பாட்டுக் கலைச்செம்மல் விருது(2022), பன்னாட்டு முத்தமிழ் விருது (2021), பண்பாட்டுக் கலைக்காவலர் விருது, எழுவான் விசேட விருது (2022) முதலான விருதுகளையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.