ஆளுமை:சந்திரலேகா, கிங்ஸ்லி

From நூலகம்
Name சந்திரலேகா
Pages மாயழகு
Pages வேளம்மாள்
Birth 1965.06.18
Place நுரெலியா
Category கல்வியாளர்

புனைபெயர்=

இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரலேகா, கிங்ஸ்லி (1965.06.18) நுவரெலியா லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த கல்வியாளர். இவரது தந்தை மாயழகு; தாய் வேளம்மாள். ஆரம்பக் கல்வியை நுவரெலியா லக்சபான தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்கல்வியை மஸ்கெலியா சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி தமிழ் சிறப்புப்பட்டம் பெற்றுள்ளார். மஸ்கெலியா சென்ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழக நுழைவு பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். கொழும்பு நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரிய கல்வியியல் முதுமாணிப்பட்டம் பெற்றுள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமா, கல்வி முகாமைத்துவ கற்கை நெறிகளை முடித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவையில் இரண்டாம் தரத்தில் உள்ளார். அத்தோடு இலங்கையில் உள்ள நான்கு ஆசிரியர் கலாசாலைகளுள் கொட்டகலை ஆசிரியர் கலாசலையின் அதிபராக உள்ளார். இவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகவும் இணங்காட்டிக்கொள்ளுகிறார். புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் கட்சி உறுப்பினராகவுள்ளார். தேசிய கலை இலக்கிய பேரவையின் மலையகக் கிளையின் செயலாளராக இருந்த இவர் தற்பொழுது அதன் உறுப்பினராகவும் உள்ளார். கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய நாளிதழ்களிலும் தயாகம், ஜீவநதி ஆகிய சஞ்சிகைகளிலும் ஊடறு இணையத்தளத்திலும் வெளிவந்துள்ளன. சந்திரலேகாவின் பேனாமுனை பெண்ணியசார்ந்ததாகவும் சமூக விடுதலையை நோக்காகக் கொண்டு எழுதி வருகிறது. பெண்சிந்தனை அமைப்பின் ஊடாக பெண் சமவுரிமை தொடர்பில் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இவர் சார்ந்த அமைப்பு சமூக விடுதலை சார்ந்து இன, மத, வர்க்கம் கடந்ததாக செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு மருத்துவ முகாம், அறிவியல் சம்பந்தமான புத்தக விமர்சனங்களும் மேற்கொள்ளப்படுகிறது. ஊடறுவின் ஊடாக மலேஷியா, இந்தியா, ஜேர்மன், இலங்கை ஆகியவற்றில் நடைபெற்ற பெண்ணிய சந்திப்புக்களில் கலந்துகொண்டுள்ளார். இரண்டு ஆவணப்படங்களை பதிவிட்டுள்ளதோடு, ஊடறுவின் செயற்பாடுகளில் தன்னை இணைத்து செயற்பட்டு வருகிறார் சந்திலேகா. இவருக்கும் ஊடறுக்கும் பெண்ணியம் சார்ந்த இவரின் செயற்பாடுகளுக்கும் காரணமாக இருந்த றஞ்சி அவர்களை நன்றியுடன் நினைவுகூருகிறார் சந்திலேகா. புதிய சங்கம் கவிதைத் தொகுப்பை இவரின் திருமண நாளில் கணவருடன் இணைந்து வெளியிட்டள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு சந்திரலேகா, கிங்ஸ்லி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 13648 பக்கங்கள் 2