ஆளுமை:சபாரத்தினம், ஆறுமுகம்

From நூலகம்
Name சபாரத்தினம்
Pages ஆறுமுகம்
Birth 1928.10.30
Place வேலணை
Category புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாரத்தினம், ஆறுமுகம் (1928.10.30 - ) வேலணை, நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், அதிபர். இவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சி கொண்டவர்.

இவர் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளதோடு ஆங்கில அறிஞர்களது தத்துவக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புக்கள், விஞ்ஞானக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மாணவர்களுக்கான புதுமுறைச் சரித்திரம் என்ற நூற்தொகுதியையும் வெளியிட்டுள்ளார். காவலூர் இலக்கிய வட்டத் தலைவராக இருந்து சில நூல்களை வெளியிட்டு வைத்ததோடு பல நூல்களிற்கான விமர்சனங்களையும் வழங்கியுள்ளார். ஆசிரியர் கலாசாலையில் பொ. கைலாசபதியுடன் பணியாற்றியுள்ள இவர், சைவசித்தாந்த ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 17-18
  • நூலக எண்: 10414 பக்கங்கள் 26-30
  • நூலக எண்: 15455 பக்கங்கள் 27-29
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 63-66