ஆளுமை:சபீனா இம்தியாஸ்

From நூலகம்
Name சபீனா
Pages ஏ.ஆர்.எம்.இஸ்மயில்
Pages சல்ஹா உம்மா
Birth
Place சாய்ந்தமருது
Category கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
SaopinaaImthiyaas.jpg

சபீனா, இம்தியாஸ் () சாய்ந்தமருதில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தைஏ.ஆர்.எம்.இஸ்மயில்; தாய் சல்ஹா உம்மா. ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தில் 1995இல் B.SC சிறப்பு பட்டம் பெற்றார். பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான கற்கைகளுக்கான பட்ட பின் படிப்பு நிறுவகத்தில் 1997 M.Sc. பட்டத்தினை நிறைவு செய்து அதனைத்தொடர்ந்து பேராதனை விவசாய கற்கைகளுக்கான பட்ட பின் படிப்பு நிறுவகத்தில் 2005ம் ஆண்டு Ph.D. படிப்பினை பூர்த்தி செய்தார்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆசிரியாராக கடமையாற்றி தற்பொழுது தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கடமையாற்றுகிறார்.

Ph.D. கற்கை நெறியில் அடைந்த சிறந்த பெறுபேற்றிற்காக ஜெனரல்.சேர்.ஜோன் கொத்தலாவ ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார். பேராதனை விவசாய கற்கைகளுக்கான பட்ட பின் படிப்பு நிறுவகத்தில் Ph.D. படிப்பில் இப் பதக்கத்தை பெற்ற முதல் மாணவி இவராகும்.


குறிப்பு : இணைய தள தகவலை அடிப்படையாகக்கொண்டது.