ஆளுமை:சரோநிதி, செல்வநாயகம்

From நூலகம்
Name சரோநிதி
Pages தம்பிப்பிள்ளை
Pages உலகம்மா
Birth 1956.01.30
Place வட்டவன்,வெருகல், திருகோணமலை
Category பாட்டுக்காரர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தம்பிப்பிள்ளை சரோநிதி (1956.01.30) இவர் வெருகல் முகத்துவாரம் எனும் கிராமத்தில் பிறந்து தற்போது வட்டவன் - வெருகல் - திருகோணமலையைச் சேர்ந்த வேடர் சமூகத்தின் வழி வந்த பன்முக ஆளுமை கொண்ட பெண்மணியாகக் காணப்படுகின்றார். இவரது தந்தை தம்பிப்பிள்ளை, தாய் உலகம்மா. இவரது கணவரின் பெயர் செல்வநாயகம். இவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது பாடசாலைக் கல்வியினை ஆறாம் வகுப்பு வரைக்கும் வெருகல் முகத்துவாரம் துவாரகா தமிழ் வித்தியாலயத்தில் கற்றுள்ளார். இவர் தற்காலத்தில் காணப்படுகின்ற குறித்த பூர்வகுடிகளின் சமூகத்தின் முதுசமாகவும் , வேடர் சமூகத்தினரிடையே தனித்துவமாகக் காணப்படுகின்ற உத்தியாக்கள் (முன்னோர்) வழிபாட்டின் நடைமுறைகள் நன்கறிந்த ஒருவராகத் தற்காலத்தில் காணப்படுகின்றார். அத்துடன் கை மருத்துவம் தெரிந்தவராகவும் காணப்படுகின்றார்.