ஆளுமை:சாரல்நாடன், கருப்பையா

From நூலகம்
Name சாரல்நாடன்
Pages கருப்பையா
Pages வீரம்மா
Birth 1944.05.09
Pages 2014.07.31
Place சாமிமலை, நுவரெலியா
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாரல்நாடன், கருப்பையா (1944.05.09 - 2014.07.31) நுவரெலியா, சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கருப்பையா; தாய் வீரம்மா. இவரது இயற்பெயர் நல்லையா. இவர் அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் உயர் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்துப் பின்னர் ஆசிரியத் தொழிலை விடுத்துத் தேயிலைத் தோட்டத் தொழிற்சாலை அதிகாரியாகப் பணியாற்றினார்.

சி.வி. சில சிந்தனைகள் என்ற இவரது முதலாவது நூல் 1986 இல் வெளியிடப்பட்டது. இவர் மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையகம் வளர்த்த தமிழ், மலைய இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும், பேரேட்டில் சில பக்கங்கள், கண்டிராசன் கதை, புதிய இலக்கிய உலகம், சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை, இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் முதலான நூல்களை எழுதியதுடன் ஆய்வு நூல்களையும் ஆக்கியுள்ளார்.

இவரது நூல்கள் சாரல் வெளியீட்டகம் மூலம் வெளியிடப்பட்டன. இவரது தேசபக்தன் கோ. நடேசையர் என்ற நூல் சாகித்திய மண்டல விருது பெற்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 62-74
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 190-194
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 67-74
  • நூலக எண்: 2071 பக்கங்கள் 03-09
  • நூலக எண்: 13667 பக்கங்கள் 28-30