ஆளுமை:சிவசரவணபவன், சுப்பிரமணியஐயர்

From நூலகம்
Name சிவசரவணபவன்
Pages சிவசுப்பிரமணிய ஐயர்
Birth 1938.02.28
Place காரைநகர்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசரவணபவன், சிவசுப்பிரமணிய ஐயர் (1938.02.28 - ) யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகவும் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சிவசுப்பிரமணிய ஐயர். இவர் 1952 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத்தொடங்கினர். இவர் சிற்பி, யாழ்வாசி போன்ற புனைபெயர்களில் எழுதி வந்துள்ளார்.

இவர் நிலவும் நினைவும், சத்திய தரிசனம், நினைவுகள் மடிவதில்லை ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் உனக்காக கண்ணே என்ற நாவலையும் எழுதியுள்ளார். அத்தோடு பன்னிரு சிறுகதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். இவர் கலைச்செல்விப் பத்திரிகையின் ஆசிரியராகவும் லண்டன் சுடரொளிப் பத்திரிகையின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதோடு யாழ்ப்பாண மாவட்டக் கலாச்சாரப் பேரவை இலக்கியக் குழுத் தலைவர், இலங்கை சாகித்திய மண்டலம், அரசாங்க இலவசப் பாடப்புத்தக எழுத்தாளர் குழு, யாழ்ப்பாண இலக்கிய வட்டம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் கடமைபுரிந்துள்ளார்.

ஞான ஏந்தல், கலைச்சுடர் ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கும் இவருக்கு 2002 இல் வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர் விருதும், கொழும்புக் கம்பன் கழக இலக்கியச் சேவைக்காகக் கௌரவ விருதும் இவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 18
  • நூலக எண்: 401 பக்கங்கள் 04-07