ஆளுமை:சிவலிங்கம், இர.

From நூலகம்
Name சிவலிங்கம்
Birth 1932.05.17
Pages 2000.06.09
Place ஹட்டன்
Category பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், இர. (1932.05.17 - 2000.06.09) ஹட்டனைச் சேர்ந்த சிந்த்னையாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி கற்று இந்தியப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் துறையில் உயர்கல்வி பெற்றுக் கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.

இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றியுள்ளார். இவர் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து இளைஞர்களை வழிநடத்தினார்.

இவர் நீலகிரி மாவட்டத்தில் இருந்த காலத்தில் தாயகம் திரும்பிய மலையக மக்களின் உரிமைக்காகப் போரடியதால் இந்தியாவிலே செங்கற்பட்டு சிறப்பு முகாம் என்ற வெஞ்சிறையில் சிறைவாசம் அனுபவித்தார். The Betrayal of Indian Tamils in Sri Lanka என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். இவரது இறப்பின் பின்னர் 2001 இல் வெளியிடப்பட்ட மலையக சிந்தனைகள் என்ற நூலில் இவரது 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

வெளி இணைப்பு

Resources

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 115-118
  • நூலக எண்: 13875 பக்கங்கள் 01-50
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 31-35