ஆளுமை:சேக்க மரைக்கார், முகம்மது காசிம்

From நூலகம்
Name சேக்க மரைக்கார்
Pages முகம்மது காசிம்
Pages செவத்த உம்மா
Birth 1918
Pages 1984.10.02
Place காரைதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேக்க மரைக்கார், முகம்மது காசிம் (1918 - 1984.10.02) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது காசிம்; இவரது தாய் செவத்த உம்மா. இவர் இஸ்லாமிய இலக்கிய அறிவிலும், பொது அறிவிலும் உயர்ந்து காணப்படுவதுடன் அலாவுத்தீன் புலவரின் சீடராவார்.

மிக எளிமையான சொற்களை அமைத்து இலேசான நடையில் இசைப்பாடல்களை உருவாக்கியிருக்கும் இவர், பள்ளிவாசல் துறை ஒலி என்னும் தலைப்பில் பாடல் பாடியுள்ளார். இவர் வானொலிக்காகப் பெருந்தொகையான பாடல்களைப் பாடியுள்ளதோடு நபி வணக்கத்தை உட்பொருளாகக் கொண்டும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரது பாடல்களைச் சிந்துக் கும்மி, சினிமா மெட்டுக்களுக்கான சாகித்தியங்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம்.

Resources

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 268-271