ஆளுமை:ஜெயானந்தம், பேதுறுப்பிள்ளை

From நூலகம்
Name ஜெயானந்தம்
Pages பேதுறுப்பிள்ளை
Birth 1957.01.05
Place அலம்பில், முல்லைத்தீவு
Category எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயானந்தம், பேதுறுப்பிள்ளை (1957.04.11) அலம்பில் முல்லைத்தீவைச் சேர்ந்த சேர்ந்த கலைஞர். இவரது தந்தை பேதுறுப்பிள்ளை; நாடக எழுத்தாளன், நடிகன், பாடகன் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் செயற்றிட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை, கனடா இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 1980-1981ஆம் ஆண்டு இவர் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடம் இலங்கையிலும் கனடாவிலும் எமது பாரம்பரிய கலை நிகழ்வுகளை சகோதரமொழிக் கலைஞர்களுடன் இணைந்து ஆதிவாசிகள் நடனம், மீனவர் நடனம், சுளகு நடனம், வயல் நடனம் போன்ற நிகழ்வுகளை இலங்கையிலும் கனடாவிலும் 40 மேடைகள் வரை மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1996ஆம் ஆண்டு யேசுவின் திருப்பாடுகள் என்ற முழு நீள நாடகத்திலும் பரிசெயர் 01 என்ற பாத்திரத்தில் நடித்தார். கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் நெறியாள்கையில் இது சூடு அடிக்கும் காலம், எரிந்த மண் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச பிரிவில் மனங்கள் மாற வேண்டு என்ற வீதி நாடகத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

செ.அல்பிரட் அவர்களின் எழுத்துருவாக்கத்தில் இன்றைய காலத்தில் எமது சமூகம் என்ற வில்லுப்பாட்டை நெறிப்படுத்தி நடத்தினார். மனமாற்றம், உறுதி, திருந்திய உள்ளங்கள், மனிதரும் தெய்வமாகலாம் ஆகிய நாடங்களில் நடித்து அவற்றை அரங்கேற்றினார். உறவுகள், விடுதலைக்காக, மாவீரன் என்ற தலைப்புக்களில் இசையும் கதையுமாக தானே பல மேடைகளில் ஆற்றுப்படுத்தி மேடையேற்றியுள்ளார். தற்பொழுது மேடை பாடகராகவும் உள்ளார்.